search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி மீது தாக்குதல்"

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் பிச்சை முருகன் (வயது 49). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் துரைசாமிபுரம், வேப்பமரத் தெருவைச் சேர்ந்த பாக்கியலெட்சுமி (34). என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    பாக்கியலெட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிச்சை முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பாக்கியலெட்சுமி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    தாயை பார்ப்பதற்காக அவர்களின் மகள் பிரியதர்ஷினி அங்கு சென்றுள்ளார். இதனால் பிச்சை முருகன் ஆத்திரமடைந்து மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

    எனவே பாக்கியலெட்சுமி தனது மகளை பிச்சை முருகனிடம் ஒப்படைக்க சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தன்னை மீறி மகளை அழைத்துச் சென்றதாக பாக்கியலெட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாக்கியலெட்சுமியை சரமாரியாக பிச்சை முருகன் வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த பாக்கியலெட்சுமி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சை முருகனை கைது செய்தனர்.

    கூடுதல் வட்டி கேட்டு ஏற்பட்ட பிரச்சினையில் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் மனைவி மீது தாக்குதல் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்தாள் நகரைச்சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கோதையம்மாள் (வயது 32).

    இவர் கடந்த ஜூன் மாதம் பாண்டியன் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (35) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கினார். ரூ.25 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்திய நிலையில் மீதமுள்ள பணத்தை செலுத்த காலதாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் உமா மகேஸ்வரி அசல், வட்டியைச் சேர்த்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு கோதையம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் பணத்தை கேட்டு உமா மகேஸ்வரி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த கோதையம்மாளின் கணவர் நாகராஜ் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் உமா மகேஸ்வரி தொடர்ந்து பணத்தை கேட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று உமா மகேஸ்வரி, அவரது தாயார் பூமணி ஆகியோர் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியதாக கோதையம்மாள் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரி, பூமணியை கைது செய்தனர்.

    ×